Published : 02 Jul 2022 06:24 AM
Last Updated : 02 Jul 2022 06:24 AM
சென்னை: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஐடி விரைவுச் சாலை நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
வண்டலூர் - மீஞ்சூரை இணைக்கும் வெளிவட்டச் சாலையில் வரதராஜபுரம், கோலப்பன்சேரி, நெமிலிச்சேரி, சின்னமுல்லைவாயல் ஆகிய 4 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன.
இவற்றில் ஜூலை 5-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வழி பயணத்துக்கு வாகன வகைகளுக்கு ஏற்ப ரூ.18 முதல் ரூ.323 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை ஏப்ரலில் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது வழக்கம். ஆனால், இந்த சுங்கச்சாவடிகளில் கடந்த ஜனவரியில்தான் சுங்கக் கட்டண வசூல் தொடங்கப்பட்டது. எனவே, அடுத்த ஆண்டு வழக்கம்போல் ஏப்.1-ம் தேதி முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்படும்.
இதேபோல, பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT