

தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றச் சாட்டியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஜனநாயக முறை யில் தேர்தல் ஆணையம் நடத்த வில்லை. புதிய வாக்காளர்கள், இளம் தலைமுறையினர், நடு நிலையாளர்களிடம் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி தமாகா அணி ஏற்படுத்திய தாக்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவும், திமுகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டன.
தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பணம் விநி யோகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
வாக்குச்சாவடிக்கு வந்த வாக் காளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. தேமுதிக வேட்பாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், தேமுதிக தேர்தல் அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர்.
தமிழகம் முழுவதுமே பணப் பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதி களில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ஏற்கத் தக்கது அல்ல.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 19-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதி களில் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது திருமங்கலம், சங்கரன் கோயில், ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வகையிலேயே மீண்டும் அமையும். எனவே, 19-ம் தேதிக்கு முன்பே இரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.