

சென்னையில் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை பெற்றுத் தருவதில் கடந்த 14 ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாகத் திகழும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பட்டப் படிப் பில் சேர இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரால் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளத் தயாராகிவரும் மாணவர்களுக்கு உதவும் வகையில், லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் மாதிரி வினாத்தாளை தயாரித்துள்ளது. கல்வித் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஆசிரியர் குழுவினர் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த வினாத்தாளை தமிழ் இந்து மாணவ வாசகர்கள் இலவசமாக பெறலாம்.
மாதிரி வினாத்தாளை பெற 9952922333 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் உங்கள் பெயர் மற்றும் முகவரியை அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.