தொழிலாளர் மேலாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 7 வரை நீட்டிப்பு

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 7 வரை நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டபடிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை),எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல் படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெறுகின்றன.

கடந்த 20-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விண்ணப்பக் கட்டணத்துக்கான ரூ.200/- (SC/ST ரூ.100/-) வங்கி வரைவோலையை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால்/ விரைவு அஞ்சல்/ கூரியர் மூலம் அனுப்பி வைக்கலாம். தொழிலாளர் மேலாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) இரா.ரமேஷ்குமாரை 9884159410 என்ற செல்போன் எண்ணிலும், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐடிஐ பின்புறம்), அம்பத்தூர், சென்னை-600098 என்ற முகவரியிலும், 044-29567885/29567886 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in