

தமிழக அரசு போக்குவரத்துத் துறை யின் கீழ் மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்க ளிப்பதை உறுதி செய்யும் வகை யில் அனைத்து தகுதியுள்ள வாக் காளர்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் பல் வேறு நடவடிக்கை எடுத்து வருகி றது. அதன்படி, போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் அனை வரும் வாக்களிக்கும் வகையில் இன்று சிறப்பு ஷிப்ட் முறைக்கு அனுமதிக்க அரசு போக்குவரத்துத் துறை செயலாளர் உத்தரவிட்டுள் ளார்.
இது தொடர்பாக போக்குவரத் துத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஊழியர்கள் சில மார்க்கங்களில் 2 ஷிப்ட் சேர்ந்தார்போல் பணி செய்துவிட்டு மறுநாள் விடுப்பு எடுத்துக்கொள்வார்கள். அத்த கைய ஊழியர்கள் அதிகாலையில் பணிக்கு வந்து இரவு வரை பணி யாற்றுவது வழக்கம். அதுபோல செய்தால் அவர்களால் வாக்கு செலுத்த முடியாது என்பதால், அதுபோன்ற மார்க்கங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இன்று ஷிப்ட் முறையில் பணியாற்ற அனு மதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலையில் பணியாற்று வோர் மதியத்திலும், மதியத்தில் பணியாற்ற இருப்போர் காலை யிலும் வாக்களிக்க முடியும்’’ என்றனர்.