எல்கேஜி, யூகேஜிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் என்னென்ன? 

எல்கேஜி, யூகேஜிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் என்னென்ன? 
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் எல்கேஜி, யூகேஜிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறை மூலம் எல்கேஜி, யூகேஜி வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. இதன் நிர்வாகம் பள்ளிக் கல்வி துறையிடம் இருந்தாலும், பள்ளிகளின் வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில்தான் இந்த வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் 2,381 எல்கேஜி, யூகேஜி வகுப்பகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் எல்கேஜி, யூகேஜி மூடப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி நிலையில், இந்த உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றது. மீண்டும் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்படும் என்று அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் எல்கேஜி, யூகேஜிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

  • தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடியில் பணியாளர்கள் உதவியுடன் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • 3 வயதுடைய குழந்தைகளை எல்கேஜி, 4 வயதுடைய குழந்தைகளை யூகேஜியில் சேர்க்க வேண்டும்.
  • பிற குழந்தைகள் அங்கன்வாடி மையக் குழத்தைகளாக வைத்து பராமரிக்க வேண்டும்.
  • மாணவர் விவரங்களை கல்வி மேலாண்லை தகவல் முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்ககத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள வளங்களை பயன்படுத்தி கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • சேர்க்கையான மாணவர்கள் கல்வி பயில்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.
  • பெற்றோர்கள் எளிதில் அணுகும் வகையிலும், சந்தேகங்களுக்கு உடனடியாக விளக்கம் அளித்திடும் வகையிலும் தலைமை ஆசிரியர்கள் செயல்படுதல் வேண்டும்.
  • அங்கன்வாடி மையங்களில் சத்துணவு அளிக்க வேண்டும்.
  • பணியாளர் பற்றாக்குறை இருந்தால் மாவட்ட ஆட்சியரை அணுகி மாற்றுப் பணியில் ஊழியர்கள் நியமிக்க வேண்டும் வேண்டும்.
  • இவற்றை தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து செயல்படுத்த வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in