

சென்னை: ராணிப்பேட்டை குழந்தைகள் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்த போது பணியில் இல்லாத ஊழியர்களிடம் விளக்கம்கோரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிபேட்டை மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் போது, காரைக்கூட்ரோட்டில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவ்வில்லத்தில் உள்ள மாணவர்களிடம் பாடம் நடத்தும் முறை குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். ஆசிரியர்களிடம் அம்மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக அந்த இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்த முதல்வர், ஆய்வின்போது, பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களிட்ம் விளக்கம்கோரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.