50 பேருக்கு மேல் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை: முதல்வர், தலைமைச் செயலருக்கு பெங்களூரு புகழேந்தி கடிதம்

50 பேருக்கு மேல் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை: முதல்வர், தலைமைச் செயலருக்கு பெங்களூரு புகழேந்தி கடிதம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 50 பேருக்கு மேல் பங்கேற்கும் அனைத்து பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என்று முதல்வர், தலைமைச் செயலர், வருவாய், சுகாதாரத் துறைச் செயலர்களுக்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு வா.புகழேந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் கரோனா பரவலைத் தடுக்க தீவிரநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், கடந்த ஜூன்23-ம் தேதி வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, பேரவை முன்னாள் தலைவர் பி.தனபால் மற்றும் முன்னாள் முதல்வரின் உதவியாளர் உள்ளிட்டோர்கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதில் இருந்து இது தெளிவாகிறது. இக்கூட்டத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்பாளர்கள் வந்திருந்ததால், பரவுதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

பல மாவட்டங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், பரவலைக் கட்டுப்படுத்த, கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். அனைத்து பொதுமற்றும் தனியார் கூட்டங்கள், குறிப்பாக 50 பேருக்கு மேல் பங்கேற்கும் கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு புகழேந்தி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in