Published : 24 Jun 2014 09:58 AM
Last Updated : 24 Jun 2014 09:58 AM

கோயம்பேடு, பெருங்களத்தூரில் இருந்து அண்ணா பல்கலை.க்கு சிறப்பு பஸ்கள்: ‘தி இந்து’ செய்தி எதிரொலியால் நடவடிக்கை

பொறியியல் கவுன்சலிங்குக்கு வருவோரின் வசதிக்காக பெருங் களத்தூர் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குவதாக மாநகர போக்கு வரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பி.இ., பி.டெக் படிப்புக்கான கவுன் சலிங்கில் பங்கேற்க தமிழகம் முழு வதும் இருந்து மாணவ, மாணவி கள் பெற்றோருடன் வந்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பெருங்களத் தூர் அல்லது கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மாநகர பஸ்ஸில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வருகின்றனர். இந்த இடங்களில் இருந்து அண்ணா பல்கலைக்கு நேரடி பஸ் வசதி இல்லாததால் கவுன்சலிங்குக்கு வருவோர் கடும் அவதிப்படுகின்றனர். அவர்கள் தாம்பரம் அல்லது வடபழனிக்கு வந்துதான் பஸ் பிடிக்க வேண்டியுள்ளது. இந்த அவலம் ஆண்டுதோறும் நீடித்து வருகிறது என்பதை கடந்த 13-ம் தேதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்நிலையில், கவுன்சலிங்குக்கு மாணவ, மாணவிகள் வந்து செல்ல வசதியாக கோயம்பேடு, பெருங் களத்தூர் மற்றும் இதர பகுதிகளில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க வுள்ளதாக மாநகர போக்கு வரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப் பதாவது:

முதல்வரின் உத்தரவுப்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 23-ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வடபழனி, அசோக்பில்லர், சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகம் வழியாக திரு வான்மியூருக்கு அதிகாலை 5 மணி முதல் 10 நிமிட இடைவெளியில் தடம் எண் T-70 (கோயம்பேடு திருவான்மியூர்) என்ற பஸ் இயக்கப்படுகிறது.

இதேபோல், பெருங் களத்தூரில் இருந்து தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சைதாப் பேட்டை, அண்ணா பல்கலைக் கழகம் வழியாக பிராட்வேக்கு 10 நிமிட இடைவெளியில் தடம் எண் 21G (பெருங் களத்தூர் பிராட்வே) என்ற சிறப்பு பஸ்கள் தினமும் அதிகாலை 5 மணி முதல் இயக்கப்படுகிறது.

இதுதவிர ஏற்கெனவே தாம்பரம், கிண்டி, வடபழனி, சென்ட்ரல், எழும்பூர், பிராட்வே, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், தி.நகர், திரு வான்மியூர் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 300 மாநகர பஸ்கள் அண்ணா பல்கலைக்கழகம் வழியாக இயக்கப் படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x