டிடிவி தினகரன் | கோப்புப் படம்
டிடிவி தினகரன் | கோப்புப் படம்

அஞ்சலக சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும்: தினகரன்

Published on

சென்னை: ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விதமான புதிய வரி விதிப்பையோ, ஏற்கெனவே அளிக்கப்பட்ட வரிவிலக்கை ரத்து செய்வதையோ மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அஞ்சலக சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் தயிர், கோதுமை மாவு ஆகியவற்றிற்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பது ஏற்புடையதல்ல.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விதமான புதிய வரி விதிப்பையோ, ஏற்கெனவே அளிக்கப்பட்ட வரி விலக்கை ரத்து செய்வதையோ மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என்று தினகரன் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in