Published : 13 May 2016 08:50 AM
Last Updated : 13 May 2016 08:50 AM

கடனிலிருந்து விவசாயிகள் மீள வழி செய்வோம்: திருவாரூரில் கருணாநிதி உறுதி

கடன் சுமையில் இருந்து விவசாயி கள் மீள வழி செய்வோம், மதுவிலக் கை அமல்படுத்துவோம் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட புலிவலம், மாங்குடி, வடகரை, கமலாபுரம், கண்கொடுத்தவனிதம், தாழக்குடி ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடியே நேற்றிரவு மேற் கொண்ட பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது:

அதிமுக ஆட்சியின் அவலங் களை எண்ணிப் பார்த்து திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். கூடூர், மாங்குடி, கோமல் ஆகிய பகுதிகளில் உள்ள வர்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் உள்ள காட்டாறு, வெட்டாறு, பாண்டவையாறு ஆகியவை அகலப்படுத்தி தரப்படும்.

விவசாயிகள் பெருவாழ்வு வாழ உங்களது கடன் சுமையில் இருந்து மீள வழி வகை செய்யப்படும். ஏழை எளிய மக்களுக்கு ஜாதி பாகுபாடின்றி உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்து கடந்த திமுக ஆட்சியில் செய்து தரப்பட்டுள்ளது.

கண்கொடுத்த வனிதம் பகுதி யில் சாலை மேம்படுத்தப்பட்டு, இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும். இந்த தொகுதியில் நான் செய்த பணிகளை எல்லாம் மக்களி டையே பட்டியலிட்டு வருகிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கை கொண்டுவரு வோம், மதுவை ஒழிப்போம். இதற் காக பொதுமக்கள் ஆதரவளித்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

மாற்றப்பட்ட பிரச்சாரம்

திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று காலை 10.30 மணிக்கு பிரச்சாரம் செய்வதாக திட்டமிடப் பட்டிருந்தது. அவரது உடல் நிலையைக் கருதி, வெயில் அதிக மாக இருப்பதால் மாலையில் பிரச்சாரத்தை வைத்துக்கொள் ளுங்கள் என அவரது மருத்து வர்கள் ஆலோசனை வழங்கினர். இதையடுத்து, காலையில் பிரச்சா ரம் செய்வதை ரத்து செய்துவிட்டு மாலை 6 மணிக்கு தனது பிரச்சா ரத்தை கருணாநிதி தொடங்கினார்.

மாலையில் தொடங்கிய பிரச்சாரத்தின் ஒருகட்டமாக கொரடாச்சேரி, செல்லூர் ஆகிய பகுதிகளில் இரவு 9.30 மணி வரை அவர் பிரச்சாரம் செய்வதாக இருந்தார். ஆனால், இரவு 8 மணிக்கு கொரடாச்சேரி செல்லாமல் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு கருணாநிதி திருவாரூர் திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x