Published : 29 Jun 2022 06:30 AM
Last Updated : 29 Jun 2022 06:30 AM
திருப்பூர்: திருப்பூர் 2-வது ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலமாககிடப்பதாக, ரயில்வே போலீஸாருக்கு கடந்த 14-ம் தேதி தகவல்கிடைத்தது.
ரயில்வே போலீஸார் சென்று சடலத்தை மீட்டு விசாரித்ததில், பழவஞ்சிப்பாளையம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த கணேசன் மகன் விமல்ராஜ் (17) என்பதும், பிளஸ்1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர் என்பதும் தெரியவந்தது.
விமல்ராஜுக்கு திக்குவாய் பிரச்சினை இருந்துள்ளதால், நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லை என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில்கடிதம் எழுதி வைத்து விட்டு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 1 பொதுத்தேர்வில் விமல்ராஜ் 293 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, “தேர்வு முடிவு வெளியாவதற்குள் விமல்ராஜ் உயிரிழந்தது, சக மாணவர்கள் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படிப்பு ஒன்றே எதிர்காலத்துக்கு கைகொடுக்கும். ஆனால், இதனை உணராமல், உடல்ரீதியாக ஏற்பட்ட பிரச்சினையால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT