Published : 29 Jun 2022 06:12 AM
Last Updated : 29 Jun 2022 06:12 AM
விழுப்புரம்: பயண வழி உணவகங்களின் உணவின் தரக்குறைபாடு தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.
அதன்படி, விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணவழி உணவகங்களில் நேற்று மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன் மற்றும் கதிரவன் ஆகியோர் கொண்ட குழு திடீர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 4 உணவகங்களுக்கு தலா ரூ 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆய்வில் பறிமுதல் செய்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஸ்பூன் மற்றும், உண்ண தகுந்த நிலையில் இல்லாத சாம்பார் சாதம் ,தயிர் சாதம் என சுமார் 30 கிலோ உணவு வகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
இந்த உணவங்களில் வழங் கப்படும் தண்ணீர் மற்றும் பொட்டலமாக வைக்கப் பட்டிருக்கும் உணவு வகைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து, அதன் தரம் குறித்த அறிக்கை வைத்து இருக்க வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி முடித்த ஒரு நபர் உணவகத்தில் பணியில் இருத்தல் வேண்டும் என இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
இக்குறைகளை 15 தினங்களுக்குள் சரி செய்யவும் குறிப்பிட்ட உணவகங்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT