Published : 29 Jun 2022 06:04 AM
Last Updated : 29 Jun 2022 06:04 AM

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகம்: ரூ.118 கோடியில் கண்ணாடி மாளிகை

ராணிப்பேட்டையில் ரூ.118 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்ணாடி மாளிகை.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ரூ.118.40 கோடியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கண்ணாடி மாளிகையாக கட்டப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம் 6 நகராட்சி, 8 பேரூராட்சி, 330 வருவாய் கிராமங்களை உள் ளடக்கியது. ராணிப்பேட்டை மாவட்டம் தொடக்க விழா நடை பெற்ற கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகமே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான இடமாகவும் தேர்வு செய்யப்பட்டது.

இங்கு ரூ.118.40 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மொத்தம் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 13.40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, 3 லட்சத்து 9 ஆயிரத்து 42 சதுரடி பரப்பளவு கொண்ட இடத்தில் ஆட்சியர் அலுவலக தரைத்தளம் 5,684 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

முதல் தளம் 5,500 சதுர மீட்டர், இரண்டாம் தளம் 6,003 சதுர மீட்டர், மூன்றாவது மற்றும் நான்காம் தளம் தலா 5,325 சதுர மீட்டர், ஐந்தாம் தளம் 623 சதுர மீட்டர் கொண்டது. அலுவலக முகப்பு மண்டபம் 250 சதுர மீட்டர் என மொத்தம் 28 ஆயிரத்து 711 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

அரசு அலுவலகங்கள்

தரை தளத்தில் வருவாய் பிரிவு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், சம்பள பிரிவு, குறை தீர்வு அரங்கம், மக்கள் தொடர்பு அலுவலகம், எல்காட் அலுவலகம் செயல்படும்.

முதல் தளத்தில் மாவட்ட ஆட்சியர் அறை, சிறு கூட்டரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் அறை, ஆட்சியர் அலுவலக சி, டி, இ பிரிவு அலுவலகம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலகம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), நேர்முக உதவியாளர் (தேர்தல்) மற்றும் பிரிவு அலுவலகங்கள், கலந்தாய்வு அரங்கு, தேர்தல் மற்றும் வருவாய் அலுவலகம் செயல்படும்.

இரண்டாம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அறை, கூட்டரங்கம், உதவி இயக்குநர் (பஞ்சாயத்து), தேர்தல் அலுவலகம் (மாவட்ட ஊரக பிரிவு), நேர்முக உதவியாளர் (மதிய உணவு), பிரிவு அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சிறு கூட்டரங்கம், கலந்தாய்வு அரங்கு, திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி) அலுவலகம் செயல்படும்.

மூன்றாம் தளத்தில் இணை இயக்குநர் (கூட்டுறவு சங்கம்), பதிவுத்துறை அலுவலகம், இணை இயக்குநர் (வேளாண்மை), இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு), இணை இயக்குநர் (சுகாதாரம்), மகளிர் திட்ட அலுவலர் அலுவலகம் நான்காம் தளத்தில் வனத்துறை அலுவலகம் மற்றும் சிறு கூட்டரங்கம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட ஆரம்ப கல்வி அலுவலர், அரசினர் ஆதிதிராவிடர் நலத்துறை, கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ் வளர்ச்சித்துறை, கனிமவளத்துறை அலுவலகம், கூட்டரங்கம் அமைந்துள்ளது.

சிறப்பம்சங்கள் விவரம்

புதிய மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் 200 நபர்களுக்கு மேல் அமரக்கூடிய 3 பெரிய கூட்டரங்கம், 200 நபர்களுக்குள் அமரக்கூடிய 7 சிறிய கூட்டரங்கம், 300 நபர்கள் அமரக்கூடிய மக்கள் குறைதீர்வு கூட்டரங்கம் உள்ளது.

இந்த கட்டிடத்தில் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 12 லிப்ட் வசதியும், 9 படிக்கட்டுகள், அனைத்து தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி, சாய்தள வசதியுடன் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்கை நீரூற்று பூங்கா உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x