Last Updated : 28 Jun, 2022 06:47 PM

 

Published : 28 Jun 2022 06:47 PM
Last Updated : 28 Jun 2022 06:47 PM

கையில் வேலுடன் இபிஎஸ்... ‘சூரசம்ஹாரம் ஸ்டார்ட்’ - சேலத்தில் கவனம் ஈர்க்கும் போஸ்டர்கள்

படங்கள்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: சூரசம்ஹாரம் ஆரம்பமாகிவிட்டதாக கையில் வேலுடன் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்ள போஸ்டரை சேலத்தில் அதிமுக தொண்டர்கள் ஒட்டியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை முன் வைத்து முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஆதரவாக பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததால் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

இதனிடையே அதிமுகவில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர்களை ஒட்டி கவனம் ஈர்த்து வருகின்றனர்.

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கரீடம் சூடி, கழுத்தில் மாலையுடன், கையில் வேல் ஏந்தியபடியான போஸ்டரை கட்சி தொண்டர்கள் ஒட்டியள்ளனர். இந்த போஸ்டரில் 'சூரசம்ஹாரம் ஆரம்பமாகிவிட்டதாக' வாசகங்களை அச்சடித்து, ஓபிஎஸ்ஸுக்கு எதிராக தங்களது கருத்தை பதிவேற்றியுள்ளனர்.

தென் தமிழகத்தில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும், மேற்கு, வடக்கு மண்டலங்களில் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கட்சி தொண்டர்கள் இரு துருவங்களாக பிரிந்து, தலைமைக்கு யார் வர வேண்டும் என்று போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x