சிறு, குறு உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி: திருவாரூரில் கருணாநிதி உறுதி

சிறு, குறு உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி: திருவாரூரில் கருணாநிதி உறுதி
Updated on
1 min read

அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களும் முழுமை யாக தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க ருணாநிதி தெரிவித்தார்.

திருவாரூருக்கு நேற்று காலை வந்த கருணாநிதிக்கு, ரயில் நிலையத்தில் திமுகவினர் ஏராளமானோர் உற்சாக வர வேற்பு அளித்தனர். பின்னர், சன்னதி தெருவில் உள்ள அவரது அக்கா வீட்டில் ஓய்வெ டுத்த கருணாநிதி, கட்சி நிர்வா கிகளுடன் அங்கு ஆலோசனை நடத்தினார்.

மாலையில் விளமல், தேவர் கண்டநல்லூர், குளிக்கரை, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில், வேனில் இருந்தபடி வாக்குசேகரித்து கருணாநிதி பேசியதாவது: திருவாரூரில் கடந்த முறை என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். மண்ணின் மைந்த ராக, உங்கள் வீட்டுப் பிள்ளை யாக மீண்டும் இங்கு போட்டி யிடுகிறேன். உயிருள்ள வரை மக்களுக்காக உழைப் பேன். திருவாரூரில் கிடப்பில் போடப்பட்ட அரைவட்ட சுற்றுச் சாலை பணி விரைவுபடுத்தப்ப டும். எனது முயற்சியால், தமி ழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் கொண்டுவ ரப்பட்டது. அதேபோல, ரூ.100 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது.

ஓடாமல் இருந்த ஆழித்தேரை விஞ்ஞான ரீதியில் ஓட வைத்தேன். எனது முயற்சியால் திருவாரூரில் ரயில்வே மேம்பா லம் கட்டப்பட்டது. மன்னார்கு டி சாலையில் தேவர்கண்டநல் லூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். ஒட்டகுடி வாய்க்கால் தூர் வாரப்படும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி செய் யப்படும் என்று தேர்தல் அறிக் கையில் அறிவித்திருந்தோம். சிறு, குறு என்று பிரிக்காமல் அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென விவ சாயிகள் கோரிக்கை விடுத்தனர் . அந்தக் கோரிக்கையை ஏற்று, அனைத்து விவசாயிகளும் பெற்ற பயிர்க் கடன் முழுமை யாக தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளைக் காப்பாற்றாத அதிமுக அரசை தோற்கடிக்க நீங்கள் தயாராக வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சி யில் விவசாயிகள் தற்கொ லைகள்தான் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, முகுந்தனூர், எண்கண், காப்பனாமங்கலம், அரசவனங்காடு, மணக்கால், திருக்கண்ணமங்கை, பவித்தி ரமாணிக்கம் உள்ளிட்ட பகுதிக ளில் பிரச்சாரம் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in