Published : 14 May 2016 11:13 AM
Last Updated : 14 May 2016 11:13 AM

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்: பணக்கட்டுகளுடன் 3 கன்டெய்னர் லாரி பிடிபட்டது

திருப்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி 3 கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை, தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் அருகே பெருமாநல்லூர்- குன்னத்தூர் தேசிய நெடுஞ்சாலையின் பாலத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள இணைப்புச் சாலையில் நள்ளிரவு 12 மணி அளவில், திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட நிலை கண்காணிப்புக் குழுவினர் எம்.விஜயகு மார் தலைமையில் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வ ழியாக வந்த கன்டெய்னர் லாரிகளை நிறுத்தச் சொல்லியுள்ளனர். 3 கன்டெய் னர் லாரி மற்றும் 3 இனோவா கார்களில் வந்தவர்கள், வங்கிப் பணம் என்று கூறியபடி நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகனங்களை விரட் டிச்சென்று பிடித்தனர்.

அப்போது நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைக்கு, பணத்தை எடுத்துச் செல்வதாகக் கூறியுள் ளனர். ஆனால், அதற்கு ரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, நிலைக் கண் காணிப்புக் குழுவினர், காவல் கண்காணிப் பாளர் சரோஜ்குமார் தாகூர் மற்றும் காவல்துணை ஆணையர் திஷா மிட்டல் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், அங்கு சென்ற போலீஸார் உரிய ஆவணங்கள் இல்லாததால் 3 வாகனங்களையும், அதில் இருந்த ரூ.570 கோடியையும் கையகப்படுத்துவதாகக் கூறி, திருப்பூர் ஆட்சியர் அலுவ லகத்துக்கு எடுத்து வந்தனர். ஆயுதம் ஏந்திய அதிரடிப் படை போலீஸார் பாதுகாப்பு டன் பணம் வைக்கப்பட்டுள்ள 3 வாகனங்களும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தனிக்குழு அமைப்பு

இதுகுறித்து திருப்பூர் ஆட்சியர் ச. ஜெயந்தி கூறியபோது,

‘‘பணத்துடன் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களில், முரண்பாடான தகவல்கள் இருந்ததால், நிலைக் கண்காணிப்புக் குழுவினர் ரூ.570 கோடியை பிடித்துள்ளனர். திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி தேர்தல் செலவினப் பார்வையாளர் யஷ்பால் சாவ்லா தலைமையில் வங்கி அதிகாரிகள், வருவாய்த்துறை, வருமான வரி மற்றும் காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள் ளது. அவர்கள் இதுதொடர்பாக விசாரித்து வருகிறார்கள். அவர்கள் தரும் அறிக்கையும், சம்பந்தப்பட்ட வங்கி அதி காரிகள் ஒப்படைக்கும் ஆவணங்களின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்றார்.

7 கி.மீ. துரத்திப் பிடித்தோம்

நிலைக் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த எம்.விஜயகுமார் ‘தி இந்து’விடம் கூறியபோது, ‘‘வங்கிப் பணம் என்றபடி, வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால், 7 கி.மீ. தூரம் துரத்திச் சென்று, செங் கப்பள்ளி பெட்ரோல் பங்க் அருகில் 3 இனோவா கார் மற்றும் 3 கன்டெய்னர் லாரிகளை பிடித்தோம். இதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 14 ஆயுதம் தாங்கிய போலீஸார், 10 கலாசி தொழிலாளர்கள் மற்றும் விசாகப்பட்டினம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியைச் சேர்ந்த அலு வலர் சூரி ரெட்டி ஆகியோர் இருந்தனர். பணம் கொண்டு செல்வதற்கான ஆவணங் கள் போதுமானதாக இல்லை. ஆகவே, வாகனங்களையும், அவர்களின் ஆவணத்தில் இருந்ததாகக் கூறப்படும் ரூ.570 கோடியையும் கையகப்ப டுத்தியுள்ளோம்’’ என்றார்.

சீருடையில் இல்லாத போலீஸார்

ஆவணங்களில், பணம் எடுத்துச் செல்லும் தேதி மற்றும் எடுத்துச்செல்லப் படும் வாகன எண்கள் பற்றிய தக வல்கள் முறையாக இல்லை. அதேபோல, போலீஸாரும் சீரு டையில் இல்லை. இதையடுத்து, நிலைக் கண்காணிப்புக் குழுவினர் மடக்கிப்பி டித்ததும், காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல்துணை ஆணையர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்ற பிறகே, சீருடையை எடுத்து அணிந்துள்ளனர் ஆந்திர போலீஸார். பின்னர், பாது காப்புக்கு வைத்திருந்த ஆயுதங் களையும் காண்பித்துள்ளனர் என்றனர் நிலைக் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றவர்கள்.

பாலத்தில் செல்லாதது ஏன்?

திருப்பூர் அருகே பெருமா நல்லூர்-குன்னத்தூர் தேசிய நெடுஞ்சாலையின் பாலத்தின் மேலே செல்லாமல் கீழ்ப் பகுதியில் உள்ள இணைப்புச் சாலையில் 3 கன்டெய்னர் லாரிகள் சென்றதும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்தை தவிர்க் க வே, மாற்று வழியில் பெருந் துறை செல்ல திட்டமிட்டிருந் ததாகவும் கூறப்படுகிறது.

திருப்பூரில் சிக்கிய ரூ.570 கோடி தொடர்பாக ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்தி வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ‘‘3 கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட பணத்துக்கு நகல் ஆவணங்கள் மட்டுமே இருந்தன. பாதுகாவலர்களும் மாற்று உடையில் இருந்துள்ளனர். இதனால் அந்த வாகனங்கள் பிடித்து நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக, எஸ்பிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி என்னுடன் பேசினார். சம்பவ இடத்துக்கு எஸ்பிஐ உயர் அதிகாரி ஒருவரும் அனுப்பப்பட்டுள்ளார். பிடிபட்ட இடத்தில் மூன்று தேர்தல் பார்வையாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின் றனர். அந்த தொகை 99 சதவீதம் வங்கியு டையதுதான் என்பது தெளிவாகியுள்ளது. தொடர் விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x