Last Updated : 23 May, 2016 09:47 AM

 

Published : 23 May 2016 09:47 AM
Last Updated : 23 May 2016 09:47 AM

கன்னியாகுமரி உள்ளிட்ட 5 தொகுதிகளில் முடிவுக்கு வந்த 50 ஆண்டு சென்டிமென்ட்

கன்னியாகுமரி உள்ளிட்ட 5 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருப்பதால் 50 ஆண்டுகளாக நீடித்து வந்த தொகுதி சென்டி மென்ட் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் 234 சட்டப்பேர வைத்தொகுதிகள் உள்ளன. குறிப் பிட்ட சில தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிகள்தான் ஆட்சியில் அமரும் என்ற சென்டிமென்ட் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் அந்த சென்டிமென்ட் காப்பாற்றப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை (மத்தி), திருவொற்றியூர், ராமநாதபுரம், சீர்காழி, ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) தொகுதிகள்தான் அந்த சென்டிமென்ட் தொகுதிகள். இந்த சென்டிமென்ட் தொகுதிக ளில் எந்தக் கட்சி முன்னிலை பெறுகிறதோ, அதை வைத்தே அந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என முன்கூட்டியே சொல்லும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. 2011-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலிலும் இந்த சென்டிமென்ட் பலித்தது. அந்தத் தேர்தலில் இந்த 9 தொகுதிகளிலும் அதிமுகவும், அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் வென்றன. அதிமுக ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் அந்தத் தொகுதி சென்டிமென்ட் முழுமையாக பலிக்கவில்லை.

234 தொகுதிகளில் 232 தொகுதி களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கப் போகிறது. தமிழக பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 89 தொகுதிகளில் வென்று பலம் பொருந்திய எதிர்க்கட்சியாகி உள்ளது திமுக. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 8, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளன. 3-வது பெரும் கூட்டணியாக களமிறங்கிய மக்கள் நலக் கூட்டணி, பாஜக, பாமக கட்சிகள் ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.

தேமுதிக வேட்பாளர்கள் விஜயகாந்த் உட்பட அனைவரும் டெபாசிட் இழந்தனர். இதன் மூலம் தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்கிற அந்தஸ்தை இழக்க நேரிட்டது. 18 தொகுதிக ளில் 50 முதல் 3 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் திமுக வேட் பாளர்கள் தோல்வி அடைந்ததால் அக்கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது. இவ்வாறு பல அம்சங்களை உள்ளடக்கிய இந்தத் தேர்தல், தொகுதி சென்டி மென்ட் நம்பிக்கையையும் விட்டு வைக்கவில்லை.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை (மத்தி), திருவெற்றியூர் தொகுதிகளில் இந்த முறை திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதே நேரத் தில் மற்ற சென்டிமென்ட் தொகுதி களான ராமநாதபுரம், சீர்காழி, ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதி களில் அதிமுகவே இந்த முறையும் வென்றுள்ளது. இந்த 4 தொகுதிகளிலும் சென்டிமென்ட் நீடிக்கிறது.

தேர்தல் முடிவால் கன்னியாகு மரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை (மத்தி), திருவொற்றியூர் தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சிதான் ஆட்சி யைப் பிடிக் கும் என்ற 50 ஆண்டு கால சென்டி மென்ட் முடிவுக்கு வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x