தேர்தல் நடத்தை விதிகளை மீறி இலவச அறிவிப்புகள்: அதிமுக, திமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் நடத்தை விதிகளை மீறி இலவச அறிவிப்புகள்: அதிமுக, திமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Updated on
1 min read

அதிமுகவும், திமுகவும் வி‌திகளை மீறி தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனு‌ப்பியுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தேர்தல் நடத்தை விதிகளை மீறி அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுகவும், திமுகவும் இன்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் வலியுறுத்தி உள்ளோம்.

உரிய நேரத்திற்குள் பதில் அளிக்கவி‌ல்லையென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in