Published : 28 Jun 2022 06:00 AM
Last Updated : 28 Jun 2022 06:00 AM

முதல்வர் வருகை முன்னிட்டு திருப்பத்தூரில் நாளை போக்குவரத்தில் மாற்றம்

திருப்பத்தூர்: தமிழக முதல்வர் வருகை முன்னிட்டு திருப்பத்தூரில் போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு 7 மணியளவில் திருப்பத் துார் மாவட்டத்துக்கு வருகிறார்.

நாளை (புதன்கிழமை) திருப்பத்தூரில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

அதனையொட்டி திருப்பத் துாரில் (நாளை) புதன்கிழமை காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லும் மாற்று வழி பாதை விவரம்:

சென்னை, வேலூர் மார்க் கத்தில் இருந்து சேலம், தருமபுரி மார்க்கமாக செல்லும் அனைத்து கனரக மற்றும் சரக்கு வாகனங்களும், செட்டியப்பனுார் வழியினை தவிர்த்து தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ் ணகிரி செல்ல வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கூட்டு ரோட்டில் இருந்து திருப்பத்தூர் வழியாக வேலூர் செல்லும் அனைத்து கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.

திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மார்க்கமாக திருப்பத்தூர் வழியில் வேலூர் செல்லும் அனைத்து வாகனங்களும் வெங் களாபுரம் கூட்டு ரோடு வழியாக ஆலங்காயம், வாணியம்பாடி வழியாக செல்ல வேண்டும்.

உள்ளூர் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் நாளை (புதன்கிழமை) காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணி வரை திருப்பத்தூர் நகர பகுதிக்குள் சரக்குகளை ஏற்றி இறக்க மற்றும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப் பாதைகள்

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண் ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்து ஏரிகோடி வழியாக மடவாளம் கூட்டுரோடு சென்று, அங்கிருந்து தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டும். குறிப்பாக, பொன்னியம்மன் கோயில் தெரு வழியாக செல்ல தடைவிதிக்கப் பட்டுள்ளது.

நாளை (புதன்கிழமை) தி.மலையில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள் என அனைத்தும் வேலூர் செல்ல வேண்டுமென்றால் வெங் களாபுரம் கூட்டு ரோடு வழியாக ஆலங்காயம், வாணியம்பாடி வழியாக செல்ல வேண்டும்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மார்க்கமாக வேலூர் செல்ல வேண்டிய அனைத்து வாகனங் களும் அவ்வை நகர் சி.கே ஆசிரமம் வழியாக புதுப்பேட்டை, நாட்றம்பள்ளி வழியாக வேலூர் செல்ல வேண்டும்.

கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் நகருக்குள் பொது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் அனுமதிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x