Published : 31 May 2016 01:13 PM
Last Updated : 31 May 2016 01:13 PM

மீனவர் வலையில் சிக்கிய ஆழ்கடல் சிகப்பு நிற கலசல் மீன்

பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் ஆழ்கடல் சிகப்பு நிற கலசல் மீன் சிக்கியது.

பாம்பன் தெற்கு கடற்கரைப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மன்னார் வளைகுடா பகுதி யில் மீன்பிடிக்கச் சென்று திங்கட்கிழமை கரை திரும்பிய நாட்டுப்படகு மீனவர்கள் வலை யில் சிகப்பு நிற ஆழ்கடல் கலசல் மீன் ஒன்று சிக்கயது. அது சுமார் 600 கிராம் எடையும், 30 செ.மீ. நீளமும், 10 செ.மீ. உயரமும் உடையதாக இருந்தது. மீனின் வாய் அருகே இரண்டு கொம்பு போன்று இருந்தால் இதை பாம்பன் மீனவர்கள் திங்கட்கிழமை ஆர்வத்துடன் பார்த்தனர்.

இது குறித்து மரைக்காயர் பட்டினத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சித் துறை ஆராய்ச்சியாளர்கள் கூறிய தாவது: இந்த மீன் வகையின் பெயர் பெரிஸ்டிஇட்யன் ஆகும். இதன் கொம்பு போன்ற பகுதி உணர்தலுக்காக ஏற்பட்ட ஒரு புடைப்பு ஆகும். மன்னார் வளைகுடா, வங்களா விரிகுடா, இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் இந்த மீன்கள் காணப்படுகின்றன. இதன் மேற்பகுதி சிகப்பு நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும். இதை உண்பது கிடையாது. விசைப்படகு மீனவர்களால் தினமும் டன் கணக்கில் கலசல் மீன்கள் பிடிக்கப்படுவது உண்டு. இவை கோழித் தீவனம், உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கடல் வளத்தை அழிப்பதால் தான் மீன்களை தேடி இலங்கை கடலுக்கு செல் லும் நிலை உள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x