Published : 27 Jun 2022 07:30 AM
Last Updated : 27 Jun 2022 07:30 AM
திருச்சி: திருச்சியில் பழனிசாமி ஆதரவு அதிமுக அலுவலகம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமைகுறித்த விவகாரத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, இருவரும் தனித்தனியாக தங்களின் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் இருதரப்பைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் தங்கள் தரப்புக்கு ஆதரவு திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பழனிசாமி ஆதரவுமாவட்டச் செயலாளர்கள் கட்சி அலுவலகத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் படத்தை அகற்றி வருகின்றனர்.
அதிமுகவின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவுநிலைப்பாட்டில் உள்ளார். இதற்கு மாநகர அதிமுக கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு எதிராக செயல்பட தொடங்கியுள்ளனர்.
இதன்தொடர்ச்சியாக, பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளஅதிமுகவினர், திருச்சி ஒத்தக்கடை பகுதியில் புதிய அதிமுக அலுவலகத்தை நேற்று திறந்தனர். இந்த அலுவலகத்தை அதிமுக மாநகர்மாவட்ட மாணவரணி செயலாளரும், திருச்சி ஆவின் நிறுவனத்தின் முன்னாள் சேர்மனுமான சி.கார்த்திகேயன் திறந்துவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT