

மஞ்சள் காய்ச்சல் பாதிப்புள்ள சூடான் நாட்டில் இருந்து சென்னை வந்த 2 பேரிடம் தடுப்பூசி போடப்பட்ட விவரம் சான்றிதழில் இல்லாததால், அவர்கள் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
சூடான் நாட்டைச் சேர்ந்தவர் கள் அப்துல் ரகுமான் (58). அகமது அப்தால் (25). அப்துல் ரகுமான் வேலைக்காகவும், அக மது அப்தால் படிக்கவும் கடந்த வாரம் சென்னைக்கு வந்தனர்.
விமான நிலையத்தில் இருந்த சுகாதாரக் குழுவினர், அவர்க ளுக்கு மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) இருக்கிறதா என்று பரிசோதனை செய்தனர். அவர் கள் வைத்திருந்த மஞ்சள் காய்ச் சலுக்கு போடப்பட்ட தடுப் பூசியின் சான்றிதழை சரிபார்த்த போது, அதில் எந்த தேதியில் தடுப்பூசி போடப்பட்டது என்ற விவரம் இல்லை. இதையடுத்து, சுகாதாரக் குழுவினர் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதிகாரிகளின் உத்தரவின் படி, 2 பேரும் சென்னை அரசுப் பொது மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் தீவிர மாக கண்காணித்து வருகின் றனர்.
தீவிர கண்காணிப்பு
மஞ்சள் காய்ச்சல் பற்றி தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறிய தாவது:
ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்கா நாடுக ளுக்கு செல்பவர்கள் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப் பூசி போடப் பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சென்னையில் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் டில் தடுப்பூசி போடப்படுகி றது. தடுப்பூசி போடப்பட்டதற் கான சான்றிதழ் இருந்தால் தான் விசா வழங்கப்படும். தடுப்பூசி போட்டு 10 நாட்க ளுக்கு பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த சான்றிதழ் 10 ஆண்டு களுக்கு செல்லுபடியாகும். சூடானில் இருந்த வந்த 2 பேருக்கு மஞ்சள் காய்ச் சலோ, காய்ச்சலுக்கான அறிகுறிகளோ இல்லை. தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழில் தேதி இல்லை. அதனால் அவர்களை சென்னை அரசு பொது மருத்துவமனையில் 6 நாட் கள் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார் கள்.
ஏடிஸ் கொசு காரணம்
டெங்கு காய்ச்சலுக்கு காரண மான ஏடிஸ் கொசுதான் மஞ்சள் காய்ச்சலுக்கு காரணம். மஞ்சள் காய்ச்சலுக்கு விரைவாக சிகிச்சை அளிக்காவிட்டால் இறப்பதற்கு வாய்ப்புள்ளது. மஞ்சள் காய்ச்சல் நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றொரு வருக்கு பரவாது. ஆனால் ஏடிஸ் கொசுக்கள் மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட் டவரை கடித்துவிட்டு மற்றொரு வரை கடித் தால் அவருக்கு மஞ்சள் காய்ச்சல் வந்துவிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.