

தமிழகத்தில் மக்கள் மாற்று அரசியலுக்கு தயாராகிவிட்டனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறி யதாவது: தமிழ்நாட்டில் நல்லாட்சி யாகவும், வெளிப்படையான ஆட்சியாகவும் இருக்க வேண் டும் என மக்கள் கருத்து வலு வடைந்துள்ளது. திமுக, அதிமுக கட்சிகளிடம் புதிய கொள்கை, திட்டங்கள், சிந்தனை கள் இல்லை என்பதை மக் கள் புரிந்துகொள்ளத் தொடங்கி உள்ளனர். மாற்று ஆட்சியை கொடுக்க மக்கள் நலக் கூட்டணி தயாராகி வருகிறது.
இன்று தமிழக பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறது. இதை ஆட்சியில் இருக்கிற அதிமுக மூடி மறைக் கிறது. அதிகாரத்தை திரும்ப பெற துடிக்கும் திமுகவும் மூடி மறைக்கிறது. தமிழக விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நெருக்கடியில் உள்ளனர். நீர் வளம் குறைந்ததால் உணவு உற்பத்தித் திறன் அதிகரிக்கப் படவில்லை. விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் ஏற் படுத்தப்படவில்லை. விவ சாயப் பொருட்களுக்கு கட்டுப் படியான விலை நிர்ணயம் கிடைப்பதில்லை.
கருப்பு பணத்தை கைப்பற்று வேன் என உறுதியளித்த மோடி, ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகளாகியும் அமைதியாக இருக்கிறார். கருப்பு பணத்தை வைத்திருப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விஜய் மல்லையாவைப்போல் கடன் பெற்று வங்கிகளை ஏமாற்றுப வர்கள், நாட்டை ஏமாற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் பெயர்களை வெளி யிடவும், நடவடிக்கை எடுக்கவும் மோடி அரசு தயக்கம் காட்டு கிறது. மோடி அரசால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந் துள்ளது.
தமிழகத்தில் மாற்று அரசி யல், கொள்கை சார்ந்த அரசி யல் வெற்றி பெற மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தெரி விப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.