Published : 25 May 2016 09:58 AM
Last Updated : 25 May 2016 09:58 AM

10-ம் வகுப்பில் விருதுநகர் சிவகுமார், நாமக்கல் பிரேமசுதா முதலிடம்: 50 பேர் 2-ம் இடம்; 224 பேர் 3-ம் இடம்

10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று விருதுநகரை சேர்ந்த சிவகுமார், நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த பிரேமசுதா, ஆகிய இருவரும் முதலிடம் பெற்றுள்ளனர்.

498 மதிப்பெண்கள் பெற்று 50 பேர் இரண்டாமிடம் பிடித்துள்ளனர். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 224 பேர் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

அரசுப் பள்ளியில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு படித்தவர்களில் உடுமலை மலையாண்டிப்பட்டினம் அரசுப் பள்ளி மாணவி ஜனனி முதலிடம் பிடித்துள்ளார். அதன் விவரம்: >அரசுப் பள்ளிகளில் உடுமலை மாணவி ஜனனி 498 மதிப்பெண் பெற்று மாநில முதலிடம்

பார்வை மாற்றுத்திறன் கொண்டவர்களில் திருநெல்வேலி பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணகுமார் 500-க்கு 489 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். அதன் விவரம்: >பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களில் நெல்லை கிருஷ்ணகுமார் முதலிடம்

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்களுடன் 4 மாணவிகள் முதலிடம் பிடித்தனர். தேர்ச்சி விகிதம் 92.42. கடந்த ஆண்டை விட 0.11 சதவீதம் அதிகம். அதன் முழு விவரம்: >புதுச்சேரியில் 10-ம் வகுப்பில் 92.42% தேர்ச்சி; 4 மாணவிகள் முதலிடம்

தேர்ச்சி விகிதம் 93.6%

இத்தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 93.6%. கடந்த ஆண்டு 92.9% ஆக இருந்த இந்த தேர்ச்சி விகிதம் இம்முறை கூடியுள்ளது.

மொத்தம் 10,11,919 பேர் தேர்வை எதிர்கொண்டனர். இவர்களில் மாணவர்கள் 5,07,507 பேர், மாணவிகள் 5,04,412 பேர். மொத்த தேர்ச்சி விகிதம் 93.6%. ஆண்கள் 91.3%; பெண்கள் 95.9%. வழக்கம்போல் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இருப்பினும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 90.5% ஆக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 91.3% அதிகரித்துள்ளது.

தேர்வு எழுதியவர்களில் 7,33,637 மாணவ, மாணவிகள் 60% மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள், மாணவிகள் தேர்ச்சி விகித ஒப்பீட்டில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. அதன் முழு விவரம்: >புள்ளிவிவர அலசல்: 10-ம் வகுப்பு தேர்ச்சி விகித உயர்வில் மாணவிகளை முந்தும் மாணவர்கள்

சதமடித்தோர்...

கணித பாடத்தில் 18,754 பேர் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 18,642 பேர் சதம் அடித்துள்ளனர். அதிகபட்சமாக சமூக அறிவியலில் 39,398 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். மொழிப் பாடத்தில் 73 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 51 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தனியார், அரசுப் பள்ளிகள் என ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.48 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன் முழு விவரம்: >10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்

வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்திலும் ஈரோடு மாவட்டம் 97.60 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன் முழு விவரம்: >10-ம் வகுப்பு அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிகத்திலும் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்

நிர்வாக ரீதியாக சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் அதிக அளவில் இருக்கிறது. சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 98.66%, அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 90.21%. அதன் விவரம்: >சுயநிதி மெட்ரிக் 98.66%, அரசுப் பள்ளிகள் 90.21%- 10-ம் வகுப்பு தேர்ச்சி விகித ஒப்பீடு

1,038 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியுள்ளார். அதன் முழு விவரம்: >10-ம் வகுப்பில் 1,038 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

*

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,054 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 223 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

பள்ளி மாணவ, மாணவிகளைத் தவிர 48,573 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினர் இந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9.31 மணிக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

> www.tnresults.nic.in

> www.dge1.tn.nic.in

> www.dge2.tn.nic.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x