Published : 18 May 2016 09:21 AM
Last Updated : 18 May 2016 09:21 AM

அரசு பள்ளிகளில் மாநிலத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகள்: துப்புரவு தொழிலாளியின் மகள் முதலிடம்

பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளி கள் அளவில் முதல் 3 இடங் களைப் பிடித்தவர்களின் ரேங்க் பட்டியலை அரசு தேர் வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.சரண்யா 1,200-க்கு 1,179 மதிப்பெண் பெற்று முத லிடத்தைப் பிடித்துள்ளார். இவர், தமிழ் 194, ஆங்கிலம் 195, இயற்பியல் 194, வேதியியல் 200, உயிரியல் 196, கணக்கு 200 என மொத்தம் 1,179 மதிப்பெண்கள் பெற் றுள்ளார்.

இவரது தாயார் நிர்மலா, ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் துப்புரவு தொழிலாளராக பணிபுரிகிறார். 7 ஆண்டு களாக கணவரை பிரிந்து வாழும் இவர், கடின உழைப் பால் தனது குழந்தைகளை படிக்க வைத்துள்ளார். மருத் துவக் கல்வி பயில விருப்பம் தெரிவித்துள்ள சரண்யா, அதற்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை ஒத்தக்கல் மண்ட பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.சிவசத்யா 1,178 மதிப்பெண் எடுத்து 2-ம் இடத்தையும், அதேபோல், பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.அனு 1,178 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். அரசு பள்ளிகளில மாநிலத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 3 பேரும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் மற்றும் மூன்றாமிடம் பிடித்துள்ள காஞ்சிபுரம் மாவட்ட அரசு பள்ளி மாணவிகளுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி பாராட்டு சான் றிதழ்கள் மற்றும் நினைவு பரிசாக கேடயம் வழங்கி கவுரவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x