

பிளஸ் 2 பொதுத்தேர்வில் உயிரி வேதியியல் பாடத்தில் ஸ்ரீ சங்கரா வித்யாஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ சங்கரா வித்யாஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி எம்.திவ்யங்கா உயிரி வேதியியல் பாடத்தில் 198 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் மொத்தம் 1147 மதிப்பெண் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாணவி எம்.திவ்யங்கா கூறும்போது, “பிளஸ் 2 பொதுத்தேர்வில் உயிரி வேதியியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் தந்தையை போல், நானும் மருத்துவராக விரும்புகிறேன். எனவே, மருத்துவ படிப்புக்காக நடக்கவுள்ள நுழைவு தேர்வில் வெற்றி பெற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்’’ என்றார்.
இந்த பள்ளியை சேர்ந்த மற் றொரு மாணவி தீபா கிறிஸ்டினா உயிரி வேதியியல் பாடத்தில் 197 மதிப்பெண் எடுத்து மாநில அள வில் இரண்டாம் இடத்தை பிடித் துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் உயிரி வேதியியல் பாடத்தில் மாநில அளவில் ரேங்க் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.