திருமாவளவன் தாயாரின் உடல்நலம்: முதல்வர் தொலைபேசியில் விசாரித்தார்

திருமாவளவன் தாயாரின் உடல்நலம்: முதல்வர் தொலைபேசியில் விசாரித்தார்
Updated on
1 min read

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது தாயாரின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் விசாரித்தறிந்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (25-06-2022) காலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, அவரது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்து, விரைவில் அவர் முழுமையாக குணம் பெற்று வீடு திரும்ப தனது விருப்பத்தை தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in