Published : 25 Jun 2022 02:28 PM
Last Updated : 25 Jun 2022 02:28 PM

வட்டார மருத்துவ அலுவலர் மீது நடவடிக்கை: கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மா.சுப்பிரமணியன் உத்தரவு

கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவக் கட்டமைப்புகளின் பல்வேறு பிரிவுகள் சரிவர செயல்படாத காரணத்தால், வட்டார மருத்துவ அலுவலர் சாந்தகுமார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பட உதவி: ட்விட்டர்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பிரசவ அறை, பிரசவித்த தாய்மார்கள் அறை, பல் மருத்துவ பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், வெளிநோயாளிகள் பிரிவு, ஆய்வுக் கூடம் மற்றும் மருந்தகம் போன்றவற்றை முழுமையாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பட உதவி : ட்விட்டர்

மருத்துவக் கட்டமைப்புகளின் பல்வேறு பிரிவுகள் சரிவர செயல்படாமலும், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், பிரசவித்த தாய்மார்கள் அறை சரியாக பராமரிக்கா வண்ணம் உள்ளதையும், அதனால் நோயர்கள் அவதியுறும் நிலையில் இருந்ததைப் பார்த்து, வட்டார மருத்துவ அலுவலர் சாந்தகுமார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x