Published : 09 May 2016 08:58 AM
Last Updated : 09 May 2016 08:58 AM

இலவச மின்சாரம் கொடுத்தால் மின் வாரியத்தை எப்படி நடத்த முடியும்? - பியூஷ் கோயல் கேள்வி

இலவசமாக மின்சாரம் கொடுத் தால் ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் இழப்பைச் சந்திக்கும் மின்வாரியத்தை எப்படி நடத்த முடியும் என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார்.

விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பியூஷ் கோயல் பேசியதாவது:

வட மாநிலங்களிலிருந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங் களுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் வழித்தடத்தின் திறன் 3,450 மெகாவாட்டிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் 5,900 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் தற்போதுள்ள அளவைவிட 80 சதவீத திறனை அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், பெரும்பங்கு மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கும்.

மத்திய மின்சாரத்துறை கொண்டு வந்துள்ள உதய் திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.22,400 கோடி அளவுக்கு தமிழக மக்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.

பின்னர், அதிமுக தேர்தல் அறிக் கையில் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருப்பது குறித்து பியூஷ் கோயலிடம் நிருபர்கள் கேட்ட தற்கு, “ஊழல் காரணமாக ஏற்கெனவே மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மின்சார வாரியத்துக்கு சுமார் ரூ.73,159 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலவச மின்சாரம் கொடுத்தால், மின்பகிர்மான கழகத்தை எப்படி நடத்த முடியும்?” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x