

திருக்கழுக்குன்றதை அடுத்த அங் கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் பகுதியில் கால்வாயில் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்படு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திங்கள்கிழமை மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, மனு அளிக்க வந்த அங்கம்பட்டு கிராம மக்கள் கூறும்போது, ‘அங்கம் பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ரேஷன் கடை 25 ஆண்டுகளாக குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. அதனால், புதிய ரேஷன் கடை கட்டித் தர வேண் டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 2013-ம் ஆண்டு அரசு ரேஷன் கடை கட்ட ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கி, பொது இடத்தில் கட்டிடம் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அதனால், கிராம சர்வே எண் 163/1ல் 32 செண்டில் அமைந்துள்ள நிலத்தில் ரேஷன் கட்டிடம் கட்டலாம் என்கிற எண் ணம் உருவானது. ஆனால், இந்த இடத்தை வார்டு உறுப்பினர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதால் ரேஷன் கட்டிடம் கட்டுவதில் சிக்கல் ஏற் பட்டது.
எனவே கிராமப் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் குளத்தின் நீர்வரத்து கால் வாயில் புதிய ரேஷன் கடை அமைக்க ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இங்கு கடையை அமைத்தால் மழைக் காலத்தில் ரேஷன் கடைக்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்படும். அதனால், இதை தடுக்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் மனு அளித்தோம். எந்த நடவடிக்கையும் இல்லாததனால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள் ளோம். தொடர்ந்து ரேஷன் கடை கடடிடப் பணி அதே பகுதியில் தொடர்ந்தால் எங்களுடைய குடும்ப அட்டைகளை திருப்பி அளிக்க உள்ளோம்’ இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.