

காங்கிரஸ் தலைவர் சோனியா, திமுக தலைவர் கருணாநிதி இருவரும் சென்னையில் நாளை ஒரே மேடையில் பிரச்சாரம் செய்கின்றனர். இதையொட்டி தீவுத்திடலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங் கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை சென்னை வரும் அவர், முதலில் புதுச்சேரி சென்று காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் சென்னை தீவுத்திடலில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அவருடன் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக, தீவுத்திடலில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 22 வேட்பாளர்களும் கலந்துகொள்கின்றனர்.
சோனியா வருகையை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை யைச் சேர்ந்த எஸ்.பி. சர்மா தலைமையில் போலீஸ் அதிகாரிகள் சென்னை வந்துள் ளனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை, மைதானம், தலைவர்கள் வரும் பாதை, விமான நிலையம் ஆகிய இடங் களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தீவுத்திடலில் சோனியா பேச விருக்கும் மேடையை துப்பாக்கி ஏந்திய போலீஸார் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரும் பாது காப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.