Published : 04 May 2016 09:03 AM
Last Updated : 04 May 2016 09:03 AM

தமிழக தேர்தல் ஏற்பாடுகள் திருப்தி அளிக்கின்றன: 14, 15-ல் பணப் பட்டுவாடாவை தடுக்க சிறப்பு ஏற்பாடு - துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தகவல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலை சுமுகமாக நடத்த தேவையான நட வடிக்கைகளைத் தேர்தல் ஆணை யம் எடுத்து வருகிறது. தேர்தல் பணப்பட்டுவாடாவை தடுக்க 200 தொகுதிகளில் பறக்கும்படைகளின் எண்ணிக்கை 3-ல் இருந்து 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, வருமான வரி புலனாய்வுப் பிரிவினரும் தங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் இரவு, பகல் பாராமல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நேற்று சென்னை வந்தார்.

மீனம்பாக்கம் பகுதியில் தனியார் ஓட்டலில் மூன்று கட்டங்களாக நடந்த கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். முதல் கூட்டத்தில், தேர்தல் பணப் பதுக்கலை தடுக்கும் வருமானவரித் துறையினர், சுங்கத் துறையினர், கலால்வரித் துறையினர் உள்ளிட்ட அமலாக்க பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நியமிக் கப்பட்ட தேர்தல் பார்வையாளர்களு டன், தேர்தல் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். இறுதியாக, 6 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சி யர்கள் மற்றும் காவல்துறை எஸ்.பி-க்கள் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்ட முடிவில் உமேஷ் சின்கா கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர் தலுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு களை இன்று ஆய்வு செய்தோம். இந்தத் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற் குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் பெறப்படும் புகார்கள் மீது நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாடுகள் எங்களுக்கு திருப்தி யளிக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், 8 மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் பணப்பட்டுவாடாவை தடுக்க தேவையான நடவடிக்கை கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சித்தோம். அரசியல் கட்சிகள் அளித்து வரும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத் தேர்தல் துறையின் நட வடிக்கைகளையும், தேர்தலையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேர்தலில் பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் கண் காணிப்பாளர்கள், தேர்தல் பறக் கும் படைகளின் எண்ணிக்கை அதி கரிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந் தைய இரண்டு நாட்களில் மே 14 மற் றும் 15-ம் தேதிகளில் பணப் பட்டுவாடா நடக்காமல் தடுக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

தமிழகத்தில் 25 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா கொண்டு கண்காணிக்கப்படுகிறது. பதற்ற மான வாக்குச்சாவடிகள் கண்டறி யப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தமிழகத் துக்கு வரும் தேதி இன்னும் முடிவாக வில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக தலைமை தேர்தல் அதி காரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘தேர்தலுக்கு முந்தைய 15 நாட்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை கள் குறித்து துணை தேர்தல் ஆணை யர் ஆய்வு செய்தார். இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பணப் பட்டுவாடாவை தடுப்பது குறித்து முக் கியமாக விவாதிக்கப்பட்டது. பாது காப்பை அதிகப்படுத்துதல், பறக் கும்படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பூத் சிலிப் வழங்குதல், தேவைப்படும் இடங்களுக்கு துணை ராணுவப் படையினரை உடனடியாக அனுப்புவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்பில் வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இருப்பதால் எளிதில் வாக்களிக்க முடியும். இதனை அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தலாம். தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி விரைவில் சென்னை வரவுள்ளார் என்றார்.

சென்னையில் கூட்டத்தை முடித்த உமேஷ் சின்கா தலைமையிலான குழுவினர், புதுச்சேரி புறப்பட்டுச் சென்றனர். புதுச்சேரியில் ஆய்வை முடித்து இன்று திருச்சி செல்கின்ற னர். நாளை அங்கிருந்து மதுரைக் கும், அடுத்தநாள் கோவைக்கும் சென்று, அந்தந்த மண்டலங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் பணிகளை ஆய்வு செய்கின்றனர். அதிகாரிகளு டன் இறுதிக்கட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x