Published : 04 May 2016 09:33 AM
Last Updated : 04 May 2016 09:33 AM

சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம்: மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் கருணாநிதி உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சேது சமுத்திரத் திட்டத்தை உறுதியாக நிறைவேற்றுவோம் என அக்கட்சித் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

மதுரையில் தென் மாவட்டங்களில் போட்டியிடும் திமுக கூட்டணிக்கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி நேற்று பேசிய தாவது:

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் தமிழ் தாய் சிலை நிறுவப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். நான் திரும்பி திரும்பி பார்க்கிறேன். சுற்றிச் சுற்றி பார்க்கிறேன். அந்த தமிழ்தாய் சிலை எங்கேயும் இல்லை. 2013-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இதுவரையில் அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இப்படித்தான் ஜெயலலிதாவின் பொய் மூட்டைகளுக்கும், கற்பனைகளுக்கும் எல்லையே இல்லை. இப்படி பொய்களை சொல்லியே 5 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டார். அந்த முதல்வருக்கு மக்கள் விடை கொடுத்து அனுப்ப வேண்டும். இதற்கு மேலும் நம்பினால் ரூ.200 கோடியில் சிலை வைத்தேன் என்பார்.

மதுரைக்கு நான் வருவது சர்வசாதாரணம். நான் சாமானியன். சாதாரண மனிதன். பள்ளிக்கூட்டத்தில் படித்த அந்த காலத்தில் இருந்து இன்று வரையில் மதுரையை அறிவேன். மதுரையில் எனக்கு அதிகமான நண்பர்கள் உண்டு. மதுரை முத்து, நான் மறக்க முடியாத நண்பர்களில் ஒருவர். அவரை நான் என்றும் மறந்த தில்லை. அவர் கட்சிக்கு ஆற்றிய தொண்டுக்கு நான் அடிமை யாகிவிட்டேன். அதனாலேயே, மதுரையை மாநகராட்சியாக்கி மதுரை முத்துவை முதல் மேய ராக்கிய பெருமையும் உண்டு. மதுரை முத்துவைப் போல, தமிழகத்தில் பல முத்துகள் இருந்தனர். இன்னமும் இருக் கிறார்கள். அப்படி இருப்பவர் களை எல்லாம் கைதூக்கி விடுவதுதான் எனது கடமை.

சேதுசமுத்திரத் திட்டம் வந்தால்தான் மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொழில், வணிகம், வெளிநாட்டு வியாபாரங்கள் தொடரும். அதற் காகத்தான் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தோம். இந்தத் திட்டம் மட்டும் நிறைவேறி இருக்குமானால் செழிப்புள்ள, சீரான நகரமாக மதுரை ஆகி யிருக்கும். தென் தமிழ்நாட்டில் விரும்பத்தக்க, அடையத்தக்க வசதிகள் கொண்ட பகுதியாக மதுரை மாறியிருக்கும். ஆனால், சில பேர் வேண்டுமென்றே இது ராமர் கட்டிய பாலம் என்று ராமர் மீது பழியைப்போட்டு அந்த திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து வருகிறார்கள்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றாலும் திமுக வெற்றிபெறும் பட்சத்தில் சேதுசமுத்திரத் திட்டம் நிறை வேற்றப்படும் என உறுதி கூறுகிறேன். மதுரைக்காக பல திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல்வர் ஜெயலலிதா வின் ஊழல் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும்.

அதுபோல, மதுரை கிரானைட் ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்படும். கிரானைட் குவாரி குத்தகைகளை வேண்டிய வர்களுக்கு வழங்க புதிய விதிமுறைகளை உருவாக்கி, அந்த விதியை பயன்படுத்தி பெருவாரியாக முறைகேட்டில் ஈடுபட்டனர். 1996-ம் ஆண்டில் திமுக ஆட்சி வந்தபிறகு, அதிமுக ஆட்சியின் கடந்தகால ஊழல் குறித்து வழக்குகள் தொடரப்பட்டன.

வெள்ளம் வந்தபோது செம் பரம்பாக்கம் ஏரி திறந்து விடப் பட்டது. அதனால் ஏற்படும் லாப, நஷ்டங்களை பற்றி ஜெயலலிதா கவலைப்படவில்லை. திமுகவி னர் ஓடி ஓடி சென்று வெள்ளத் தில் தத்தளித்தவர்களை காப்பாற் றினர். அப்படிப்பட்ட மனிதாபி மானம் அதிமுகவினருக்கு உண்டா? இன்று வரை அவர்கள் அதை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மோடிக்கு புகழாரம்

கரூரில் அன்புநாதன் போன்றவர்கள் அமைச்சர்களின் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு கோடி கோடியாக கொள்ளை அடிக்கின்றனர். இவர்கள் மீது நிர்வாகத் திறமை மிக்க, எதையும் துணிச்சலுடன் செய்யும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து எங்களை அமைதியாக ஜனநாயகக் கடமை ஆற்ற வழி ஏற்படுத்தி தர வேண்டும். மாற்றப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் நியமிக்கும்படி தேர்தல் ஆணையத்தை தம்பிதுரை மிரட்டுகிறார். இந்த தேர்தலில் நாணயம், நேர்மை நிலைநாட்டப்பட வேண்டும். அது தேர்தல் ஆணையத்திலேயே யாராக இருந்தாலும் அதை தைரியமாக பிரதமர் மோடி செய்ய வேண்டும். மோடி துணிச்சலானவர். பழைய நண்பர் மோடி இதை செய்வார் என நம்புகிறோம். இவ்வாறு கருணாநிதி மோடியை புகழ்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x