முதுகுளத்தூர் அருகே பள்ளி கட்டிட மேற்கூரை சேதம்: அச்சத்துடன் படிக்கும் மாணவர்கள்

முதுகுளத்தூர் அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை.
முதுகுளத்தூர் அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை.
Updated on
1 min read

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுவதால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்கும் நிலை உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 40 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டிடம் 2005-ம் ஆண்டு கட்டப்பட்டது.

பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பகுதி சேதமடைந்து அவ்வப்போது சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். விரைவில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் தங்கப்பாண்டியன் கூறியதாவது: நல்லூர் கிராம பள்ளியின் கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பகுதி ஒவ்வொரு நாளும் இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது.

இதனால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்கும் நிலை உள்ளது. பள்ளிக் கட்டிடத்தின் நிலைமையை அனைத்து அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளேன். எனவே புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in