ஆதரவாளர்கள் தொகுதியில் மட்டும் பிரச்சாரம்: காங்கிரஸ் தலைவர்கள் மீது வேட்பாளர்கள் அதிருப்தி

ஆதரவாளர்கள் தொகுதியில் மட்டும் பிரச்சாரம்: காங்கிரஸ் தலைவர்கள் மீது வேட்பாளர்கள் அதிருப்தி
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர் கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்வதால் மற்ற வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் இளங் கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தங்க பாலு ஆகியோர் தலைமையில் பல்வேறு கோஷ்டிகள் செயல் பட்டு வருகின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளில் இந்த தலைவர்கள் தங்களது ஆதரவாளர்கள் சிலருக்கு சீட் வாங்கிக் கொடுத் துள்ளனர்.

இந்த தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே அதிக நேரம் பிரச்சாரம் செய்கின்றனர். ‘தங்களது ஆதரவாளர் தொகுதி யில் மட்டுமே பிரச்சாரம் செய் கிறார்’ என்கிற பழிச்சொல்லில் இருந்து தப்பிப்பதற்காக அருகி லுள்ள தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் ஓரிரு தொகுதிகளில் வேண்டா வெறுப்பாக தலையைக் காட்டி விட்டு செல்கின்றனர்.

காரைக்குடி, ஆலங்குடி, மைலாப்பூர் ஆகிய தொகுதிக ளில் போட்டியிடும் தனது ஆதர வாளர்களை ஆதரித்து ப.சிதம் பரம் பிரச்சாரம் செய்துள்ளார். கூடவே இந்த தொகுதிகளுக்கு அருகிலுள்ள (திருமயம், திருப் பத்தூர், ஆயிரம்விளக்கு) தொகுதி களில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் அவர் பிரச்சாரம் செய்துள்ளார்.

மற்றொரு கோஷ்டியின் தலை வரான தங்கபாலு, அவரது ஆதரவாளர்கள் போட்டியிடும் ஓசூர், காங்கேயம் ,ஆத்தூர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய் துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன், அவரது ஆதரவாளர்கள் போட்டி யிடும் தொகுதிகளிலும், முக்கிய திமுக பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவர் கூறும் போது, “தமிழகத்தில் மக்களை கவரும்வகையில் பேசக்கூடிய நட்சத்திர பேச்சாளர்கள் காங்கிர ஸில் மிகவும் குறைவு. அப்படி யொரு சூழலில் கட்சியின் கோஷ்டித் தலைவர்கள் காங் கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டி யிடும் 41 தொகுதிகளில் மட்டு மாவது தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஓரளவுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவ ரவர் ஆதரவாளர்களுக்கு மட்டுமே வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கின்றனர். இது மற்ற வேட் பாளர்கள் மத்தியில் அவர்கள் மீது அதிருப்தியை யும், வெறுப்பை யும் உருவாக்கியுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in