

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த படிஅக்ரகாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நேற்று சத்து மாத்திரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்களில் பலரும், முட்டையுடன் கூடிய சத்துணவை உட்கொண்டனர்.
இந்நிலையில் 19 மாணவர்கள் மற்றும் 24 மாணவிகள் என 43 பேருக்கு தலை சுற்றல், வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.