Published : 23 Jun 2022 07:18 AM
Last Updated : 23 Jun 2022 07:18 AM
சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாரிசுகள் தொழிற்கல்வி கூடங்களில் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: சென்னை குரோம்பேட்டை, பர்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் சாலைபோக்குவரத்து நிறுவனத்தின்கீழ் இயங்கி வரும் தொழிற்கல்வி கூடங்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகதொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீட்டில்2022-23 நடப்பு கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பு மற்றும் இரண்டாமாண்டு நேரடி பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை, www.mtcbus.tn.gov.in -> others என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வு முடிவுகள் வெளியான ஒரு வாரத்துக்குள் தலைமையக தொழிலாளர் நலப் பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT