

மெரினா கடலில் மூழ்கி ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள்.
வேலூரைச் சேர்ந்த ஆசிப்(17), இதயத்(17) உட்பட 4 மாணவர்கள் நேற்று முன்தினம் சென்னையை சுற்றிப்பார்க்க வந்தனர். சென்னை யில் பல இடங்களை பார்த்து விட்டு இரவில் மெரினா கடற்கரைக்கு சென்ற அவர்கள் கடலில் குளித்த னர். அப்போது திடீரென வந்த பெரிய அலையில் சிக்கிய ஆசிப், இதயத் இருவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக போலீஸா ருக்கு தகவல் கொடுத்தனர்.
அண்ணா சதுக்கம் போலீஸார், மீனவர்கள் உதவியுடன் 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இதயத்தின் உடல் கரை ஒதுங்கியது. போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிப்பின் உடலை தொடர்ந்து தேடிவருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சதீஷ் (22) அவரது நண்பர் சுரேஷ்குமார் (23) ஆகியோர் நேற்று முன்தினம் மாலையில் மெரினா கடற்கரைக்கு வந்து அண்ணா சதுக்கம் அருகே கடலில் குளித்துள்ளனர். அப்போது பெரிய அலையில் சிக்கிய 2 பேரும் தண்ணீரில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில் இருவரின் உடல்களும் அப்பகுதியில் கரை ஒதுங்கியது.
தகவலறிந்து விரைந்து வந்த அண்ணா சதுக்கம் போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.