Published : 23 Jun 2022 06:00 AM
Last Updated : 23 Jun 2022 06:00 AM

வரும் 25, 26-ம் தேதிகளில் எஸ்ஐ எழுத்துத்தேர்வு; 300 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்: திருப்பத்தூர் எஸ்.பி., தகவல்

உதவி காவல் ஆய்வாளர் எழுத்து தேர்வு தொடர்பான காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன்.

திருப்பத்தூர்: நேரடி உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான தகுதித்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் மையங்களுக்கு 300 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

திருப்பத்துார் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேரடி உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான தகுதித்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுகள் வரும் 25 மற்றும் 26-ம் தேதி என 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.

இத்தேர்வுகள் திருப்பத்தூர் துாய நெஞ்சக் கல்லூரி, வாணியம்பாடி பிரியதர்ஷினி கல்லூரி மற்றும் இஸ்லாமியா கல்லூரி என 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தேர்வுகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பத்துாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட் டத்தில் வரும் 25 மற்றும் 26 ஆகியஇரண்டு நாட்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், நேரடி எஸ்ஐ பணிக்கான தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் மொத்தம் 3 ஆயிரத்து 164 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வுகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு பிரிவுகளாக நடைபெறும். காலையில் எழுத்துத் தேர்வும், பிற்பகலில் தகுதித் தேர்வும் நடைபெறும்.

எனவே, தேர்வு எழுத வருபவர்கள் காலை 8.30-க்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு வர வேண்டும்.

தேர்வு எழுத வரும் போது பால் பாயின்ட் பென், ஹால் டிக்கெட் மற்றும் ஏதாவது ஒரு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். செல்போன், கால்குலேட்டர், டேப், லேப்டாப் போன்ற மின்னணு சாதனப்பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. தேர்வு நடைபெறும் மூன்று தேர்வு மையங்களுக்கு 300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்’’என்றார்.

இதனைத்தொடர்ந்து தேர்வுக்கான ஏற்பாடுகள் மற்றும் தேர்வு நடத்தும் வழிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில், டிஎஸ்பிக்கள் கணேஷ், சுரேஷ் பாண்டியன், சரவணன், தங்கதுரை, நிலவழகன், அம்மாதுரை, உட்பட 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x