

சென்னை: சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் வழங்குவது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. வடமாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களுக்குள் புகுந்து ரயில்களை தீயிட்டு கொளித்தினர். இதன் காரணமாக வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரம் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படுவதாக கடந்த 22ம் தேதி தெற்கு ரயில்வே அறிவித்தது.
இந்நிலையில், இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. எனவே, இன்று முதல் மீண்டும் பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.