

கோவையில் நிருபர்களிடம் காயிதே மில்லத் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஜி.தாவூத் மியா கான் நேற்று கூறியதாவது:
பெரும்பான்மை மக்கள் பெற்றிருக்கும் உரிமைக்கு இணையாக முஸ்லிம்களும் பெறுவதற்கு அதிமுகவை ஆதரித்தால்தான் பெற முடியும்.
அதனால்தான் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பணியாற்றி வருகிறோம். வரும் தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானோர் அதிமுகவுக்குதான் ஆதரவு அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.