

முஸ்லிம் சமுதாயத்துக்கு தமிழக அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடையநல்லூர் தொகுதி யில் மட்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில் திமுக தலைவர் கரு ணாநிதியை அக்கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன், கடைய நல்லூரில் வெற்றி பெற்ற கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் காதர் மொகிதீன் கூறியதாவது:
தமிழக அமைச்சரவையில் முஸ் லிம்கள் யாரும் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. அமைச்சர வையில் முஸ்லிம் சமுதாயத்துக்கு இடமளிக்க வேண்டும். பணபலத் தால் திமுகவின் வெற்றியை பறித்து விட்டனர். 3-வது அணி, 4-வது அணி என ஏற்படுத்தி திமுகவின் வெற்றியை தடுத்துவிட்டனர். இனி 3-வது அணி அமைய வாய்ப்பு இல்லை. எனவே, வருங்காலங் களில் திமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.