

போதைப் பொருள் விற்பனையை தடை செய்யக் கோரி மேற்கெ ாள் ளப்பட்ட நடைபயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைத்தார்.
சென்னை வியாசர்பாடி பகுதி யில் அண்மையில் போதையில் இருந்த இளைஞர்கள் சிலர், கண்ணில் பட்ட 12 பேரை அரி வாளால் வெட்டினர். இந்த சம்ப வத்தைக் கண்டித்தும் போதைப் பொருள் விற்பனையை தடுக்கக் கோரியும், தமிழ்நாடு ஒடுக்கப் பட்டார் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் நேற்று நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. கொடுங்கையூர் மின்வாரிய அலுவலகம் அருகில் நடை பயணத்தை இயக்கத்தின் மாநிலத் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தேர்தல் காலத்திலும் அதை முக்கியமான வாக்குறுதியாக அனைத்து அர சியல் கட்சிகளும் முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. புதிய அரசும், மதுவிலக்கை படிப்படி யாக அமல்படுத்துவதற்காக சில அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், குறிப்பிட்ட கால வரம்பை நிர்ண யித்து அதற்குள் பூரண மதுவி லக்கை கொண்டுவர வேண்டும்.
வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும், கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களுக்கு படித்த இளைஞர்கள், நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அடிமையாகி உள்ளனர். இந்த மோசமான நிலை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே நடை பயணத்தை நடத்துகிறோம். போதைப் பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. அதை மக்கள் உணர வேண்டும். வெளியில் இருந்து சிறப்பாக பணியாற்றுவோம்.
இந்த நடைபயணம் வியாசர் பாடி அசோக் பில்லர் பகுதியில் நிறைவடைந்தது. இதில் இயக்கத் தின் மாநிலச் செயலாளர் மு.வீர பாண்டியன், வட சென்னை மாவட் டச் செயலாளர் ஜி.சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.