எத்தனால் உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பாக சர்க்கரை துறை அதிகாரிகளுடன் வேளாண் அமைச்சர் ஆலோசனை

எத்தனால் உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பாக சர்க்கரை துறை அதிகாரிகளுடன் வேளாண் அமைச்சர் ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: எத்தனால் உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பாக சர்க்கரை துறை அதிகாரிகளுடன் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.

சர்க்கரை துறையின் செயல்பாடுகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று நந்தனம் சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில், சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் உழவர் நலத்திட்டங்கள், அரவைப்பணிகள், தொழில்நுட்ப செயல்திறன், கரும்பு பதிவு, சர்க்கரைக் கட்டுமானம், கரும்பு பகுதி ஒதுக்கீடு, கரும்பு நிலுவைத்தொகை, நிதி செயல்பாடு, இணைமின் திட்ட செயல்பாடுகள், எத்தனால் உற்பத்தியை மேம்படுத்துதல், சர்க்கரைத்துறை எதிர்கொள்ளும் சவால்கள், இயங்காமல் உள்ள சர்க்கரை ஆலைகளை இயக்கிட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கரும்பு பயிரிடும் விவசாயிகளை ஊக்குவித்தல் உள்ளிட்வைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அரவைக்கு ஆலை தகுதியாக உள்ளதா?, சர்க்கரை ஆலைகளில் உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சர்க்கரை ஆலைகளின் மேம்பாட்டிற்கு முன்மொழியப்படும் ஆலோசனைகள் மற்றும் அரசு அறிவிப்புகளின் தற்போதைய நிலை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in