சட்டப்பேரவை நியமன உறுப்பினராக நான்சி ஆன் சிந்தியா மீண்டும் நியமனம்

சட்டப்பேரவை நியமன உறுப்பினராக நான்சி ஆன் சிந்தியா மீண்டும் நியமனம்
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை நியமன உறுப்பினராக ஆங்கிலோ இந்தியன் பிரிவைச் சேர்ந்த நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸை ஆளுநர் கே.ரோசய்யா மீண்டும் நியமித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தின் 20-வது முதல் வராக ஜெயலலிதா பதவி யேற்றுள்ளார். சட்டப்பேரவையில் ஆங்கிலோ - இந்தியன் பிரிவைச் சேர்ந்த ஒருவர் நியமன உறுப்பினராக நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸை சட்டப்பேரவையின் 235-வது உறுப்பினராக நியமித்து ஆளுநர் கே.ரோசய்யா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அகில இந்திய ஆங்கிலோ இந்தியன் சங்க மதுரை கிளையின் தலைவராக உள்ள நான்சி, 1955-ம் ஆண்டு பிறந்தவர். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆலப்புழை ஆகும். எம்பிபிஎஸ் படித்து மருத்துவராக பணி யாற்றி வரும் நான்சி, கடந்த 14-வது சட்டப்பேரவையிலும் நியமன உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in