

அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் பணிபுரி யும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடாக, நேர சலுகையுடன் ஒருநாள் கூடுதல் ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
நூறு சதவீத வாக்குப் பதிவு நடைபெறுவதற்காக அரசு போக்கு வரத்து கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலங்களில் பணிபுரியும் அரசு போக்குவரத்து கழகத் தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கள் வாக்களிக்கும் வகையில் நேரச்சலுகை வழங்கப்பட் டுள்ளது.
இதன் மூலம், காலையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் கள் மற்றும் நடத்துநர்கள் வாக்களித்து விட்டு சிறிது நேரம் தாமதமாக வந்து பேருந்து களை இயக்கலாம். தொலைதூர பேருந்துகளில் பணிபுரியும் நபர்கள் பணியை சில மணி நேரங்களுக்கு முன்பாக முடித்து வாக்களிக்க செல்லலாம் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவு தினத்தில் பணிபுரியும் அனைத்து ஓட்டுநர் கள் மற்றும் நடத்துநர்களுக்கு வழக்கமான ஊதியத்துடன் ஒருநாள் கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என அரசு போக்கு வரத்து கழக காஞ்சிபுரம் மண் டலம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.