

இன்று உலக தைராய்டு நோய் தினம்
தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை யில் மே 25-ம் தேதி (இன்று) உலக தைராய்டு நோய் தினம் கடை பிடிக்கப்படுகிறது.
ஆண்களைவிட பெண் களையே இந்த நோய் அதிகம் தாக்குகிறது. அயோடின் சத்து மிகுதியாதல் மற்றும் குறைதல், தைராய்டு சுரப்பியின் வீக்கம், தொற்றுநோய் கிருமி, வைரஸ் கிருமி தாக்குதல், இதய கோளாறு, வலிப்பு போன்றவற்றுக்காக உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளாலும் தைராய்டு நோய் பாதிப்பு வரலாம். மேலும், பிட்யூட்டரி சுரப்பி பாதிப்பாலும், மூளையில் ஹைபோதலாமஸ் ஹார்மோன் உற்பத்தி குறைபாட் டாலும் சில சமயம் மன உளைச் சலாலும் தைராய்டு நோய் ஏற்பட லாம்.
இதுகுறித்து சித்த மருத்துவர் எஸ்.காமராஜ் கூறியதாவது: இதில் குறைந்த அளவே தைராய்டு ஹார்மோன் இருப்பது ஹைபோ தைராய்டிசம் என்றும், அதிக அளவு தைராய்டு ஹார்மோன் இருப்பது ஹைபர் தைராய்டிசம் என்று 2 வகைகள் உள்ளன.
தைராய்டு நோய்க்கு பல்வேறு ஆங்கில மருந்துகள் இருந்தாலும், பக்க விளைவுகள் இல்லாத ஏராளமான சித்த மருந்துகளும் உள்ளன. குறிப்பாக அமுக்ரா, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சிறுநாகப்பூ, கிராம்பு சேர்ந்த மருந்து, சுத்தி செய்த அன்னபேதி, நற்பவழம் சேர்ந்த மருந்து, கடுக் காய், நெல்லிக்காய், தான்தோன் றிக்காய் சேர்ந்த மருந்து, எண் ணற்ற வெளிச்சந்தை மருந்துகள் தைராய்டு நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
இதற்கான சித்த மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் உள்ள அரசு இந்திய முறை மருத்துவப் பிரிவுகளில் இலவசமாக வழங்கப் படுகிறது. தனியார் கடைகளிலும் கிடைக்கிறது. மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று சித்த மருந்துகளை உட்கொண்டு, தைராய்டு நோயில் இருந்து விடுபட லாம். இவ்வாறு அவர் கூறினார்.