

தமிழகத்தில் நோட்டாவுக்கு 5.58 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்துள்ளதாகவும், இது கடந்த சட்டப்பேரவை தேர்தலை விட பல மடங்கு அதிகம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், லட்சக்கணக் கானோர் எந்த கட்சிக்கும் வாக் கில்லை என்பதை குறிப்பிடும் விதமாக நோட்டாவுக்கு வாக்களித் துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 232 தொகுதிகளில் தேர்வு செய்யப் பட்டவர்கள் பெயர்கள் நாளை (20-ம் தேதி) அரசிதழில் வெளியி டப்படும். அத்துடன் தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் நிறைவு பெறும்.
அதே நேரம், தேர்தல் நடக்க உள்ள அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் தேர்தல் முடிந்து, 25-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். மறுநாள் அதில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டதும் அங்கும் தேர்தல் நடவடிக்கைகள் நிறைவு பெறும்.
இந்த தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 5.58 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்கள் நோட்டாவுக்கு வாக் களித்துள்ளனர். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 1.3 சதவீதம் ஆகும். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான நோட்டா வாக்குகளை விட பலமடங்கு அதிகம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.