

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் போது பொதுமக்கள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக் கும்படி தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணை யம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்ற பொதுமக்கள் சிலர் உயிரிழந்தது தொடர்பாக வந்த புகார்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்காக எடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது அவர்கள் உரிமை. இந்த கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது பொதுமக்களுக்கான பாதுகாப்பை மாவட்ட நிர்வாகங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கடலூர், விருதுநகர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஏப்ரல் 11, 15 மற்றும் 20-ம் தேதிகளில் நடந்த கூட்டங்களில், பொதுமக்கள் வலுக்கட்டாயமாக, மிரட்டப்பட்டு காலை 11 மணிக்கே கூட்டம் நடக்கும் இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிரச்சாரக் கூட்டம் மாலை 3 மணிக்கே தொடங்கியுள்ளது.
முன்னதாக பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்கவோ, வெளியில் செல்லவோ அனுமதிக் கப்படவில்லை. அவர்களுக்கு குடிநீர் வசதியும் செய்து தர வில்லை. இதில், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த கூட்டத்தில், 17 பேர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 2 பேர் முறையாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்துள்ளனர். சேலம் மாவட்டம் மகுடன்சாவடியில் நடந்த கூட்டத்தில் வெப்பம் மற்றும் அதிக நெருக்கடியால் மக்கள் இறந்துள்ளனர். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கு ரூ.300 கொடுத்து கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் இது தொடர்பாக விசாரணை நடத்தி, 2 வாரங் களுக்குள் விரிவான அறிக் கையை ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காதவண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.